தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன், மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தணிக்கை சிவ.சண்முகம் ஆகிய இருவரும் பல்வேறு ஊழல் முறைகேடு செய்ததாக கூறியும் சாதிய பாகுபாடுடன் செயல்படுவதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சி நிர்வாகிகள் திரண்டு ஊரணிபுரம் கடைத்தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவோணம் வடக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் பார்வேந்தன், கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குறித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து வழக்கறிஞர் பார்வேந்தன் கூறும் போது: திருவோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர் , மற்றும் தணிக்கை துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஆகியோர் பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடு செய்து வருவதாகவும் இது குறித்து மேலும் திருவோணம் வட்டார வளர்ச்சி அலுவலரத்துக்குப்பட்ட நெய்வேலி, சிவவிடுதி, வெட்டிக்காடு, ஆகிய ஊராட்சிகளில் பணிபுரிந்து வந்த ஊராட்சி செயலாளர்களிடம் சாதிய வன்மத்தோடு நடந்து கொண்ட அதிகாரிகள் மீது இந்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்காத பட்சத்தில் சம்பந்தப்பட்ட அந்த அதிகாரிகள் இரண்டு பேர் மீதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வழக்கு தொடுக்கப்படும் என்று கூறினார்,











; ?>)
; ?>)
; ?>)