நாகை நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் அபிராமி அம்மன் திடலில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தலைவர் குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய வர்த்தக குழும தலைவர் சுபாஷ்சந்திரன், கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இதில் ஆன்லைன் வர்த்தகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிக்கக்கூடாது. கார்ப்பரேட் ZEPTOவுக்கு தாரை வார்க்க நினைக்கும் மத்திய அரசை கண்டிப்பது, கட்டுப்பாடு இல்லாத கியூ -காமர்சை அனுமதிக்கக்கூடாது. சிறு மற்றும் குறு வணிகர்களை அழிக்கும் போக்கை கைவிட வேண்டும்.
எம்ஆர்பி போல், எம்எஸ்பி என்ற குறைந்த பட்ச விற்பனை விலை சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.







; ?>)
; ?>)
; ?>)