உச்சநீதிமன்ற செயல்பாட்டில் அரசியல் ரீதியாக செயல்படும் துணை ஜனாதிபதி பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபேயை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் முத்து அமுதநாதன் தலைமையிலும், மதுரை மாவட்ட செயலாளர் சவுரி ராமன் முன்னிலையில், ஜம்முகாஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிர் தியாகம் செய்த 26 பேருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது, அதனைத் தொடர்ந்து அரசியலமைப்பு சட்டப்படி செயல்படும் உச்சநீதிமன்றத்தை மிரட்டும் வகையிலும், உச்சநீதிமன்ற செயல்பாட்டில் அரசியல் ரீதியாக தலையீடு செய்கின்ற துணை ஜனாதிபதி மற்றும் பாஜக பாராளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபேயை கண்டித்தும், நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மதுரை வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் மோகன் குமார், பொறுப்புத் தலைவர் பாஸ்கரன், சங்கத்தின் மூத்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்,
