நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம் கிழக்கில் புதிதாக மதுபானக் கடையை திறக்க எதிர்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிதாக மதுபானக் கடையை திறக்க கூடாது என நாம் தமிழர் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்திய நிலையில் அவர்களது எதிர்பை மீறி இன்று புதிதாக மதுபான கடையை பலத்த போலிஸ் பாதுகாப்போடு கடை திறத்து விற்பனை துவங்கியதால் தங்களது எதிர்பையும் மீறி கடை திறந்ததால் மதுபானக் கடையை மூட வேண்டும் என கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் காவல்துறைக்கும் , போராட்டகாரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இச்சம்பவத்தால் இப்பகுதியில் சிறிது நேரம் பதட்டம் நிலவியது.