கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தினர் தமிழக அரசு மற்றும் EMRI-GHS நிறுவனத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு, தொழிற்சங்களுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்த்தை மீறி EMRI-GHS நிறுவனம் தன்னிச்சையாக முடிவு செய்து கடந்த 4 ஆண்டுகளாக வழங்கிய 16 சதவீத ஊதிய உயர்வில் 10 சதவீதம் மட்டும் இந்த ஆண்டு வழங்கியுள்ளதாகவும், மீதமுள்ள 6 சதவீத்ததை திருடி உள்ளதாகவும் குற்றம் சாட்டி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கடந்த நான்கு ஆண்டுகளா ஒரு சதவீதம் கூட ஊதிய உயர்வை உயர்த்தி வழங்காத கண்டித்தும்,தற்போது நிலவி வரும் விலைவாசி உயர்வுக்கு ஏற்பட்ட 30 சதவீதம் ஊதிய உயர்வை உயர்த்தி வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
சட்டவிரோத நீக்கத்திறகு எதிராக நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி பணி நீக்கம் செய்யபட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் மீண்டும் வேலை வழங்க வேண்டும், சட்டவிரோத 12 மணி வேலை திட்டத்தை கைவிட்டு 8 மணி நேர மூன்று ஷிப்ட் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திய ஆர்ப்பாட்டகாரர்கள், 16 சதவீத ஊதிய உயர்வுக்கு பதிலாக 10 சதவீத ஊதிய உயர்வு வழங்கிய EMRI -GHS நிறுவனத்திற்கு உறுதுணையாக, அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு கண்டனங்களை பதிவு செய்தனர்.
மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்து அக்டோகபர் 18-ம் ஆண்டு வேலை நிறுத்தப்போரட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்..
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் பதாகைகளை ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்..