உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மாண்பமை பி.ஆர்.கவாய் மீது செருப்பை வீசிய ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் கும்பலைச் சார்ந்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை கைது செய்ய வலியுறுத்தியும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கக் கூடிய அராஜக சம்பவத்தை கண்டித்தும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில், மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம், வெள்ளிக்கிழமையன்று தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு, அமைப்பின் மாவட்டத் தலைவர் கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

தீ.ஒ.மு மாவட்டச் செயலாளர் ஆர்.கலைச்செல்வி, மாவட்டப் பொருளாளர் பி.சத்தியநாதன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கவிஞர் களப்பிரன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். வாசு, தமிழ் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் ரங்கராஜன், இடதுசாரி ஒற்றுமை மேடை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன், சிஐடியு மாவட்டத் தலைவர் சி.ஜெயபால், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன், சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்டச் செயலாளர் என்.குருசாமி, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.புண்ணியமூர்த்தி, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.சரவணன், மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், மூத்த தோழர் என்.சீனிவாசன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட நிர்வாகிகள், பழ.அன்புமணி, வீ.கரிகாலன், ஆர்.பிரதீப் ராஜ்குமார், ஏ.அருணாதேவி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.அன்பு, எம்.ராம், தாமோதரன் உள்ளிட்ட அனைத்து முற்போக்கு அமைப்புகளின் சார்பில் பலர் பங்கேற்றனர்.

இதில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதலைக் கண்டித்தும், ஆர்எஸ்எஸ், சங்பரிவார் கும்பலின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.