


தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு எதிராக பல்வேறு அமைப்பினரும், மாணவர்களும் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.
சென்னையை அடுத்த ஆவடியில் இந்து கல்லூரி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கையில் பதாகையுடன் ஆளுநரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநர் ரவி தமிழ்நாட்டிற்கும், தமிழுக்கும் எதிராக செயல்படுவதாக மாணவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். தமிழக ஆளுநர் ரவிக்கு கண்டனம் தெரிவித்து சேலம் அரசு கலைக் கல்லூரி முன்பாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேட்டூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆளுநர் ரவியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றைய உரையின்போது ஆளுநர் சட்டமன்ற மரபை மீறி செயல்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசினர் கலை கல்லூரி மாணவர்கள் ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை காந்திபுரம் திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஆளுநரை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது.

