காரைக்காலில் தீபாவளி பட்டாசு வெடிக்கும்போது சிறார்களுக்கு கண் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க மாவட்ட முழுவதும் 6000 பாதுகாப்பு கண் கண்ணாடிகள் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் சட்டமன்ற உறுப்பினர் ஜி.என். எஸ் ராஜசேகர் அவர்களிடம் வழங்கி தொடங்கி வைத்தார்.

தீபாவளி பண்டிகை வரும் 20ஆம் தேதி நாடு முழுவதும் மிக விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பட்டாசுகள் கண்களில் பட்டு பாதிப்பு அடைந்து பல சிறுவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதனை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பாக 6000 பாதுகாப்பு கண்ணாடிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

5அதன்படி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ரவி பிரகாஷ் கண் பாதுகாப்பு கண்ணாடியை இன்று சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ் ராஜசேகர் அவர்களிடம் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் சிறுவர்கள் கண்ணாடி அணிந்து வெடி வெடிக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ் ராஜசேகர் அறிவுறுத்தினர். இந்த பாதுகாப்பு கண் கண்ணாடி மாவட்டம் முழுவதும் தொகுதி வாரியாக சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாக சிறுவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.