கன்னியாகுமரி கடலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பல்வேறு நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் நாகர்கோவில் மாநகராட்சி
மேயர் மகேஷ் தலைமையில் நடந்த லாட்ஜ் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கன்னியாகுமரியில் ரூ.15 கோடி செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்றும் இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கன்னியாகுமரி கடலில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பது குறித்து கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், நகராட்சி ஆணையர் கன்னியப்பன் ஆகியோர் கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளை நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது நகராட்சி பொறியாளர் பழனி, உதவி பொறியாளர் ரமேஷ், சுகாதார மேற்பார்வை யாளர் பிரதீஷ், கவுன்சிலர்கள் ஆட்லின், சிவசுடலைமணி, இக்பால், டெல்பின்ஜேக்கப், சகாய சர்ஜினாள், முன்னாள் கவுன்சிலர் தாமஸ், கிராம நிர்வாக அலுவலர் சாத்தாவு, கன்னியாகுமரி நகர தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் தாமஸ் ஷியாம், கன்னியாகுமரி நகர தி.மு.க. வட்ட செயலாளர்கள் ரூபின், பிரைட்டன் உள்பட பலர் பங்கேற்றனர்.











