• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பட்டாசு வெடிக்க தடை

By

Sep 15, 2021 ,

டெல்லியில் காற்று மாசு என்பது அக்டோபர் – பிப்ரவரி இடைப்பட்ட காலத்தில் அதிக அளவில் இருக்கும். காரணம், அந்த பருவம் குளிர்காலம் என்பதால் பனியுடன் சேர்ந்து (பார்ட்டிகள்ஸ்) மாசு கலப்பதால் அபாயகரமான சூழல் என்பது டெல்லியில் ஏற்படும். ஒரு பக்கம் டெல்லியின் அண்டை மாநில (பஞ்சாப்,ஹரியானா, உத்திரபிரதேசம்) விவசாயிகள் பயிர்செய்த நெல் கழிவுகளை எரிக்க தொடங்குவார்கள். மற்றொரு பக்கம் தசரா காரணமாக ஏற்படும் காற்று மாசு! இதனிடையே தீபாவளி பண்டிகையின் போது வெடிக்கப்படும் பட்டாசினால் ஏற்படும் நச்சு காற்று மாசு என டெல்லியில் கடுமையான காற்று மாசு ஏற்படும். இதனால், சுவாச கோளாறு உள்ளிட்ட குறைபாடு உள்ள குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை நவம்பர் 4ம் தேதி கொண்டபடவுள்ள நிலையில் பட்டாசு வெடிக்க முழுமையான தடையை டெல்லி அரசு பிறப்பித்துள்ளது. மேலும், பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையால் பட்டாசு விற்பனை செய்ய கூடாது எனவும் இறுதி நேரத்தில் இந்த உத்தரவை தெரிவித்தால் பட்டாசு விற்பனையாளர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பதால் ஒரு மாதத்திற்கு முன்பே இத்தகைய அறிவிப்பை வெளியிடுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். உத்தரவை மீறி பட்டாசு வெடித்தாலோ! அல்லது விற்றாலோ! சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என டெல்லி முதலமைச்சர் எச்சரித்துள்ளார்.