• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி..,

ByT. Balasubramaniyam

Feb 1, 2026

அரியலூர் மாவட்டத்தில் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ், 16 தனியார் கல்லூரிகளில் கல்வி பயிலும் 1,297 மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

அரியலூர் வாணி மஹாலில் நடைபெற்ற அரசு விழாவில், சிறப்பு அழைப்பாளராக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு மடிக்கணினிகளை வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய அமைச்சர், மாணவர்களின் கல்வித் திறன், டிஜிட்டல் அறிவு மற்றும் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவர் களுக்கு திராவிட மாடல் அரசு உறுதுணையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்ன ப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்க.சொ.க.கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் ஆ.ரா.சிவராமன், அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி,, அரசு அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்