அரியலூர், மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டுப் போட்டிகளில் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் பதக்கங்கள் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா,ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ .க .கண்ணன் ஆகியோர் தலைமை வைத்து, விளையாட்டுப் போட்டியில் வென்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி ,சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்வில் ஏ.எஸ். மருத்துவமனை மருத்துவர் அகமது ரியாஸ், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அலுவலர் ந.லெனின்,மாவட்ட மதிமுக செயலாளர் க. இராமநாதன்,அரியலூர் வடக்கு ஒன்றிய மதிமுக செயலாளர் கா.பி .சங்கர், விளையாட்டு பயிற்றுநர்கள் விளையாட்டு வீரர்கள்,வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டனர்.
