• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

குமரிக்கு பிரதமர் நரேந்திர மோடி (மே30)ம் தேதி மாலை வருகை

இந்தியாவின் 18_வது நாடாளுமன்ற தேர்தலில் கடைசி கட்டமாக 7_வது கட்ட தேர்தல் எதிர்வரும் ‌ ஜூன் 1_ம் தேதி வாக்கு பதிவு நடக்க இருக்கும் நிலையில், அதற்கான கடைசி கட்ட தேர்தல் பரப்புரை 30_ம் தேதி மாலை 5மணிக்கு நிறைவடைகிறது.

தேர்தல் பிரச்சாரம் நிறைவடையும் 30_ம் தேதி பிற்பகல் பிரதமர் விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வரும் பிரதமர் நரேந்திர மோடி.(மே31_)ம் தேதி, குமரி கடல் நடுவே இருக்கும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள சுவாமி விவேகானந்தர் சிலை இருக்கும் மண்டபம் அல்லது அங்குள்ள தியானம் மண்டபத்தில் ஒரு நாள்(மே_31)ம் நாள் தியானம் மேற்கொள்ள இருக்கிறார், அதன் பின் ( ஜூன் 1-ம்) தேதி பிற்பகல் 3.30 மணிக்கு கன்னியாகுமயிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து மாலை 4.05 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

பிரதமர் திருவனந்தபுரம், அங்கிருந்து கன்னியாகுமரி வரும் நிகழ்வு அதிகார பூர்வமான அறிவிப்பை, திருவனந்தபுரம் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் கன்னியாகுமரி நிகழ்வில் வேறு யார், யார் வருகிறார்கள் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும், குமரி மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜ் பிரதமரை தமிழக அரசின் சார்பில் வரவேற்பார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகத நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் பங்கேற்பார்கள் என பாஜகவினர் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.