• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விரைவில் பிரதமர் மோடி கர்நாடகம் வருகை

பெங்களூரு – மைசூரு விரைவுச்சாலையை திறக்க பிரதமர் மோடி விரைவில் கர்நாடகம் வருகை தர உள்ளதாக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்.
பா.ஜனதா ஜனசங்கல்ப யாத்திரை பொதுக்கூட்டத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:- மண்டியாவில் உள்ள மைசுகர் சர்க்கரை ஆலை கடந்த பல ஆண்டுகளாக மூடியே இருந்தது. அதை திறக்க எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த ஆலையை தனியாருக்கு விற்குமாறு அழுத்தம் கொடுத்தனர். ஆனால் நான் அதை நிராகரித்துவிட்டு அந்த ஆலையை அரசே நடத்த உத்தரவிட்டேன். அதை நடத்த தேவையான நிதியை ஒதுக்கினேன். அதன் பலனாக இன்று அந்த ஆலையில் கரும்பு அரவை பணி நடக்கிறது. இதன் மூலம் மண்டியா விவசாயிகளுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளோம். இரட்டை என்ஜின் அரசால் பெங்களூரு-மைசூரு இடையே அதிவேக விரைவு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது பிரதமர் மோடி அரசின் மகிமை. இந்த விரைவு சாலையை திறக்க பிரதமர் மோடி விரைவில் கர்நாடகம் வரவுள்ளார். இந்த சாலை திறக்கப்பட்டால், பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு ஒன்றரை மணி நேரத்தில் சென்றடைய முடியும். இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.