• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பகவதி அம்மன் திருக்கோவில் யாகசாலை பூஜை கால் நாட்டு…

மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜை துவக்க விழா கால் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில் மே மாதம் 11-ம் தேதி கலசாபிஷேகம் மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதனை யோட்டி யாகசாலை பூஜை துவக்க விழா கால் நாட்டும் நிகழ்ச்சி குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமை நடந்தது.

நிகழ்ச்சியில் இணை ஆணையர் பழனிக்குமார், துளசிதரன் நாயர் உள்ளிட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள், சூப்பிரண்டு சுப்பிரமணியன், மேலாளர் செந்தில்குமார் உட்பட பக்தர்கள் பங்கேற்றனர். திருக்கோயில் தந்திரி, சங்கரநாராயணன் மற்றும் பகவதி குருக்கள் பூஜை ஏற்பாடுகள் செய்தனர்.