• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது மநீம!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி, உள்ளாட்சியில் தன்னாட்சி’ என்பது மக்கள் நீதி மய்யம் பயணிக்கும் பாதை. உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தி, மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உலகத்தரத்தில் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் எனும் லட்சிய தாகம் நமக்கு உண்டு. கிராம சபைகளாகட்டும், உள்ளாட்சித் தேர்தலை காலம் தாழ்த்தாமல் நடத்த வலியுறுத்துவதாகட்டும், முந்திக்கொண்டு ஒலிக்கும் குரலும் முன்சென்று களம் காணும் கரங்களும் நம்முடையவைதான்.

ஒருங்கிணைந்த தமிழ்நாடு நகர்ப்புற உள்ளூர் தன்னாட்சி சட்டத்தை நிறைவேற்றுவது; மக்களுக்குத் தடையற்ற சேவைகளை உறுதி செய்ய, ஸ்மார்ட்போன்கள் மூலம் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளையும் ஆன்லைன் மயமாக்குதல்; மழை வெள்ளத்தின் தாக்கத்தைத் தடுக்க, சிங்கப்பூரில் இருப்பது போல் சர்வதேச தரத்திலான நிரந்தரத் தீர்வு; சென்னையின் வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு; ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படுவதை உறுதிப்படுத்துவது; நகர்ப்புற தன்னாட்சி அமைப்புகளில், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வார்டு கமிட்டிகள் மற்றும் ஏரியா சபைகள், ஊழலற்ற நேர்மையான வெளிப்படையான துரித நிர்வாகம் உள்ளிட்ட எண்ணற்ற தனித்துவம் மிக்க செயல்திட்டங்களை நாம் நமது தேர்தல் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறோம். இவற்றை நடைமுறைப்படுத்தவும் தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட இருக்கும் தகுதிசால் வேட்பாளர்களின் முதற்கட்டப் பட்டியலை இன்று வெளியிடுகிறேன். வேட்பாளர்கள் இக்கணம் முதல் வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு ஒவ்வொரு வாக்காளரிடமும் நமது கொள்கைகள், செயல்திட்டம், சின்னம் ஆகியவற்றைக் கொண்டு சேர்க்கவேண்டும். இவர்களை வெற்றியடையச் செய்யும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. நாம் ஒரு படையாகத் திரண்டு உழைக்க வேண்டும்.

அந்தந்த பகுதிகளுக்கான செயல்திட்டத்தை உருவாக்கி இமைப்பொழுதும் சோர்வடையாமல் உழையுங்கள்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – 2022 கோயம்புத்தூர் மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்

அதன்படி, தேன்மொழி வார்டு எண் 2ல், செந்தில்குமார் வார்டு எண் 7ல், விஜயா மனோகர் வார்டு எண் 15ல், சசிகலா தேவி வார்டு எண் 19ல், விமல்குமார் வார்டு எண் 20ல், கீதாமணி வார்டு எண் 21ல், ஜேஸ்பர் மெல்வின் வார்டு எண் 22ல், பழனிசாமி வார்டு எண் 24ல், முத்துமாரி வார்டு எண் 25ல், உமா மகேஸ்வரி வார்டு எண் 29ல், சங்கீதா வார்டு எண் 30ல், அசோக் குமார் வார்டு எண் 31, முருகேசன் வார்டு எண் 32, மாரியப்பன் வார்டு எண் 34, ராஜசேகரன் வார்டு எண் 35, லட்சுமி பிரியா வார்டு எண் 37, சாந்தி வார்டு எண் 38, பரிமளா வார்டு எண் 40, நந்தினி வார்டு எண் 41, ஆனந்த்குமரன் வார்டு எண் 42, ராஜேஸ்வரி வார்டு எண் 43, ஆண்டாள் வார்டு எண் 45, டேனியல் ராஜ் வார்டு எண் 46, ஆகாஷ்விமல் வார்டு எண் 47, முத்துகிருஷ்ணன் வார்டு எண் 52, கீதாலட்சுமி நாராயணசாமி வார்டு எண் 53, ஜோதிமணி வார்டு எண் 54, சம்பத்குமார் வார்டு எண் 56, ரம்யா வார்டு எண் 63, பிரியா ராஜகன்னியப்பன் வார்டு எண் 67, S.சாந்தி வார்டு எண் 68, ராகேஷ் வார்டு எண் 69, சசிரேகா வார்டு எண் 70, ரேணுகா தேவி வார்டு எண் 71, R.S.அருண்குமார் வார்டு எண் 72, R.வடிவேலன் வார்டு எண் 73, P.பிரகாஷ் வார்டு எண் 74, மஞ்ஜேஸ்வரி வார்டு எண் 75, ராமன் வார்டு எண் 76, மஞ்சு வார்டு எண் 80, S.கார்த்திகேயன் வார்டு எண் 81, சித்தாரா பானு வார்டு எண் 82, V.சாவித்திரி வார்டு எண் 83, A.R.ஷேக் மொய்தீன் வார்டு எண் 91, அமலாதேவி வார்டு எண் 93, J.சுரேஷ் வார்டு எண் 96, A.நாகராஜ் வார்டு எண் 98 என 47 வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இது முதற்கட்ட பட்டியல்தான். அடுத்தடுத்த பட்டியல் விரைவில் வெளியாகும். தேர்தல் களத்தில் வாகை சூட வேட்பாளர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.”

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டது மட்டுமின்றி தனது ட்விட்டர் பக்கத்திலும் வேட்பாளர்களுக்கு கமல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.