பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனை, குமரி அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன்நேரில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தார்.
முன்னாள் ஒன்றிய அமைச்சரும், இந்நாள் மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு தயாநிதி மாறன் MP பிறந்த நாளை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கம் அருகே உள்ள MP அலுவலகத்தில் அவரை நேரில் சந்தித்து குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவரும், விளையாட்டு மேம்பாட்டு அணியின் கிழக்கு மாவட்ட அமைப்பாளருமான பிரபா G ராமகிருஷ்ணன் நினைவு பரிசு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

இதில் நாகர்கோவில் மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகள் வக்கீல் என் ராமதாஸ், மால்டன் ஜினின், சிபன், ரமேஷ், சுப்பையா பிள்ளை ஆகியோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
