• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

Byகாயத்ரி

Jan 10, 2022

உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு வருகிற 20-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படடுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.

அதன்படி, சென்னை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு வரும் ஜனவரி 20-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 21-ம் தேதி முதல் பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற இருந்தன.இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைப்பதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.