தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்ரவர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி, பள்ளி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டருக்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பள்ளி நிர்வாகம் பின் வாங்கியது தற்போது பேசும் பொருளாகவும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் உள்ள சிஇஒஎ தனியார் பள்ளியை யார்? நிர்வகிப்பது என்ற தகராறில், கடந்த ஏப்ரல் 14 இல் பள்ளி தாளாளர் மதுரை ஆதி பராசக்தி நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் துறை உதவி ஆணையர் ஸ்டாலின் மைக்கேல்(74) மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக, பழனி செட்டிபட்டி பேரூர் சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி, செல்வ மனோகரன் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமினில் வெளி வந்தனர்.

இந்த வழக்கு நடைபெற்று வரும் வேளையில், இன்று சிஇஒஎ பள்ளி பேருந்துகளில் பழனிசெட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி உள்ளிட்டவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கோரி போஸ்டர் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது, அந்த போஸ்டரில் தேனி பழனிச்செட்டிபட்டி சிஇஒஎ பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து, தாளாளர் மற்றும் ஊழியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய, பழனிசெட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்ரவர்த்தி, செல்வ மனோகரன், கிருஷ்ணன், பாண்டீஸ்வரன் உள்ளிட்டவர்களை காவல்துறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்.. பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த போஸ்டர்க்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஸ்டாலின் மைக்கேல்
இதுகுறித்து, பள்ளித் தாளாளர் ஸ்டாலின் மைக்கேல்லிடம் நாம் கேட்டபோது..,
அப்படி போஸ்ட் ஒன்றும் ஒட்டவில்லையே என்றார்.
உங்கள் பள்ளி பேருந்தில் பின்பக்கம் போஸ்டர் ஒட்டிய படமே வந்துள்ளது என்று கேட்டபோது..,
ஒரு பேருந்தில் மட்டும் தான் ஒட்டப்பட்டது. உடனே அதை கிழித்து விட்டோம். பள்ளி நிர்வாகத்தில் இருந்து அந்த போஸ்டர் அடிக்கவில்லை. ஒருவர் கொண்டு வந்து போஸ்டர் கொடுத்தார். ஒட்டியவுடன் அதை எங்கள் நிர்வாகத்தில் கிழிக்க சொல்லி விட்டோம். மிதுன் சக்கரவர்த்தி எதிரிகள் தான் கொடுத்திருக்கிறார்கள், அதனால் எங்களுக்கும், அதாவது பள்ளியின் நிர்வாகத்திற்கும் இந்த போஸ்டருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.

மிதுன் சக்கரவர்த்தி
பள்ளி பேருந்தில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் என ஒட்டப்பட்டு உள்ள போஸ்டரை, எங்களுக்கும், அந்த போஸ்டருக்கும் சம்பந்தமில்லை என பள்ளி நிர்வாகம் பின் வாங்கி ஒதுங்குவது எதனால்? பயப்படுகிறதா? அல்லது பணிகிறதா? அப்படியானால் மிதுன் சக்கரவர்த்திக்கு எதிராக களத்தில் இறங்கி இருக்கும் புதிய அணி யார்? இந்த பிரச்சனையில் இப்படி பல கேள்வி எழுகிறது.