• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பிரபல தயாரிப்பாளர் ஆனந்தி பிலிம்ஸ் V.நடராஜன் காலமானார்

Byஜெ.துரை

Feb 2, 2025

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, மகேந்திரன் முதன் முறையாக இயக்கிய முள்ளும் மலரும் , R.C.சக்தி இயக்கிய சிறை, பிரபு ரகுவரன் நடிப்பில் K.சுபாஷ் இயக்கி அறிமுகமான கலியுகம், பிரபு நடித்த உத்தம புருஷன், தர்மசீலன், ராஜா கையை வெச்சா, நடிகர் சத்யராஜ் நடித்த பங்காளி, R.V.உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த சின்னக்கவுண்டர் , நடிகர் திலகம் பிரபு இணைந்து நடிக்க டைரக்டர் பாரதிராஜா இயக்கிய பசும்பொன் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா நடிப்பில் B.லெனின் இயக்கிய நதியைத்தேடி வந்த கடல் போன்ற படங்களை தயாரித்தவர் ஆனந்தி பிலிம்ஸ் V.நடராஜன்.

சமீப காலமாக உடல் நலம் சரி இல்லாமல் இருந்து வந்த நிலையில் இன்று அதிகாலை 1மணி அளவில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு காலமானார். இவருக்கு வயது 70. இவரது மனைவி ஜோதி வயது – 55, செந்தில், விக்கி என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவரது இறுதிச் சடங்கு சென்னை மைலாப்பூர் ஈடுகாட்டில் நடைபெற்றது.