மதுரை ஊமச்சிகுளம் அருகே, அமைந்துள்ள ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல 2025 ம் ஆண்டு கடந்த ஏப்.11-ந் தேதி பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து, தினமும் அலங்காரங்களில் சாமி ஊர்வலம் நடைபெற்றது. இதனை தன் தொடர்ந்து, 8-ம் நாள் திருவிழாவாக பூக்குழி திருவிழா நேற்று முன்தினம் (ஏப்.18) நடைபெற்றது. இவ்விழாவினை முன்னிட்டு , கோவிலில் பக்தர்கள் அலகு குத்துதல், காப்பு கட்டுதல், பரவைக் காவடி உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

இதையடுத்து சந்தன மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் , அம்மன் சப்பரம் வீதி உலா வந்து பூக்குழி திடலை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, பூக்குழியை சுற்றி செவ்வந்தி, பச்சை, அரளிப்பூ, ரோஜாப்பூ, தாமரை உள்ளிட்ட பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தனர்.
இதில், ஊமச்சிகுளம் சுற்றி உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் பூக்குழி இறங்கி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். பாதுகாப்பு ஏற்பாடுகளை, ஊமச்சிகுளம்
காவல் ஆய்வாளர் சாந்தி பாலாஜி தலைமையில் போலீசார் ஈடுபட்டனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை,
கமிட்டி நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.