• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொன்னியின் செல்வன் நாயகிகளின் அணிகலன்கள் ஏலம்..!

Byகாயத்ரி

Sep 26, 2022

தமிழ் இலக்கியத்தின் கிளாசிக் வரலாற்று நாவல்களில் ஒன்றாக கருதப்படுவது பொன்னியின் செல்வன் நாவல். இந்த நாவலுக்கு இல்லா ரசிகர்களே இல்லை. இதிலும் கல்கியின் எழுத்தில் உள்ள உயிர் கதையின் கதாபாத்திரங்களை கண் முன் காட்டிவிடும். இப்படி பல விஷயங்களை உள்ளடக்கிய இந்த நாவல் வெளியாகி 70 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இது திரைப்பட வரலாற்றில் ஒரு சவால் என்றே சொல்லலாம்.

இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் குந்தவை மற்றும் நந்தினி ஆகிய கதாபாத்திரங்களில் திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளனர். இந்த கதாபாத்திரங்களுக்காக இருவருக்கும் சோழ காலத்தைய தங்க நகைகள் உருவாக்கப்பட்டு அணிந்து நடித்துள்ளனர். இந்த உண்மையான தங்க நகைகளை பிரபல தங்க நகை நிறுவனம் ஒன்று ஸ்பான்சர் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பட ரிலீஸான பின்னர் அந்த நகைகளை அந்த நிறுவனம் ஏலம் விட முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அழகு நாயகிகள் அணிந்திருந்த அணிகலன்களுக்கு மவுஸ் அதிகம் தான் இருக்கும் போல.