• Sun. May 5th, 2024

நாகர்கோவிலில் பொன்னார் பேட்டி

நமது கனிமவளங்களை காக்கும் பொறுப்பு இருக்கிறது. குமரி மாவட்டம் மக்களின் தேவைகளுக்கான கல், மண் கிடைக்க மாட்டேன் என்கிறது.

கனிம வளங்களை எடுத்து செல்லும் டார்சர் லாரிகளால் சாலை விபத்தில் 6_பேர் மரணம் அடைந்துள்ளார்கள். இதற்கான பொறுப்பை மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜ் ஏற்க வேண்டும். லாரி யாருக்கு சொந்தமானது என்ற கேள்வி இல்லை.

குமரி மாவட்டத்தில் சாலை மற்றும் பாலம் பணிகளுக்கு மண், கல் கிடைக்காத நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நான் களத்தில் இறங்கி அதற்கான பணியை செய்தேன். செயல்படாத ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இங்கு இருக்கிறார்.

அரவிந்த் கெஜ்ரிவால்க்கு 22-முறை சமன் அனுப்பியும் அவர் ஆஜர் ஆகவில்லை.

முதலமைச்சராக இருந்தாலும் சமனுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும்.

கொல்கத்தா முதல்வர் சொன்னாரே யாரோ என் வீட்டினுள் ரூ 10_கோடியை கவரில் வைத்து போட்டுச் சென்று விட்டார்கள். நான் அந்த பணத்தை வங்கி கணக்கில் போட்டேன் என சொல்லி உள்ளாரே எனவும் பொன்னார் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *