• Sat. May 4th, 2024

காங்கிரஸ் வேட்பாளர் யார்.? முடிவு செய்யும் இடத்தில் MLA ஆர். ராஜேஷ் குமார்

நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்போடு, குமரி மாவட்டத்தில் விளவங்கோடு சட்டமன்றத்தின் இடைதேர்தலும் இணைந்து தேர்தல் வெப்பத்தை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மக்களவை வேட்பாளர் விஜய் வசந்த் என்பது என்றோ உறுதி ஆகிவிட்ட நிலையில், குமரி மாவட்ட அரசியல் வரலாற்றில், இந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உட்பட மற்றக் கட்சிகளின் நாடாளுமன்ற வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பை பின்னுக்கு தள்ளி விட்டு விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் யார்.? என்ற பார்வையே, மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களின், கட்சிகளின் பார்வையாக இருக்கிறது.

குமரி மாவட்டத்தில் பெரும்பான்மை சமுகமாக மீனவர்கள் சமுகத்தில் இருந்து 77_ஆண்டு சுதந்திர காலத்தில். காங்கிரஸ் கட்சியின் சார்பில் குளச்சல் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக லூர்து அம்மா சைமன். இவர் காமராஜர் அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தவர். இதன் பின் நீண்டகாலம் இடைவெளியில். குளச்சல் சட்டமன்ற தொகுதியிலிருந்து. தி மு க., சார்பில் இரா. பெர்னாட் சட்ட மன்ற உறுப்பினர், அதனை அடுத்து திமுக மீனவ அணியின் மாநில செயலாளராகவும் இருந்தார்.

குமரி மாவட்ட மீனவ சமுக மக்களின் மத்தியில் இருந்து.ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலின் போதும் மீனவர்கள் சமுகத்திற்கு ஒரு பிரதிநித்துவம் வேண்டும் என்ற குரல்கள் எழும். இதுவரை அந்த எண்ணம் நிறைவேறாது கடந்து போனாலும்,மீனவ சமுகம் எப்போதும் பாஜகவிற்கு எதிராகவே ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்தே வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு வெற்றிக்கு பின்னால் மீனவ சமுகத்தின் வாக்குகளுடன், கிறிஸ்தவ மதத்தின் அனைத்து பிரிவுகளின் பாஜக எதிர்ப்பு என்பது ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ்யின் வெற்றியை எளிதாக்கி விடுகிறது.

நாடாளுமன்றத்தின் தேர்தல் உடன் விளவங்கோடு இடைத் தேர்தல் வலிந்து வந்துள்ள இந்த சூழலில், திமுகவிலே அரசியல் வாழ்வை தொடங்கிய மீனவ சமுகத்தை சேர்ந்த,திமுக வில் பல்வேறு தேர்தல்களில் விருப்ப மனு செலுத்திவருபவர். அண்மையில் நடந்த மக்களவை மேலவை தேர்தலில் திமுக வேட்பாளராக பல்வேறு வகையில் காய் நகர்த்தி, தமிழக கத்தோலிக்க ஆயர்கள் அனைவரிடமும் பரிந்துரை பெற்று கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்ததோடு. தமிழக மீனவர்கள் சமுகத்தின் சார்பில் மேலவை தேர்தலில் இவரது பெயரை தி மு க அறிவிக்கும் என எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே கிடைத்த நிலையில் அவசர, அவசரமா தளவாய் சுந்தரத்தின் பரிந்துரையுடன் அ தி மு க வில் ஞானஸ் தானம் பெற்ற கையோடு, தளவாய் சுந்தரத்தால், கன்னியாகுமரி மக்களவை அதிமுக வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டார். கட்சி தலைமை அதிகார பூர்வமாக முதல் பட்டியலில் கன்னியாகுமரி அறிவிக்கப்படாத நிலையில், கன்னியாகுமரி மக்களவை தேர்தலை காட்டிலும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், மீனவ சமூகம் விளவங்கோடு இடைத்தேர்தலில் மீனவருக்கு வாய்ப்பு தரவேண்டும் என்ற குரலுக்கு மத்தியில், காங்கிரஸ் வேட்பாளராக ஒரு பெரிய கூட்டமே டெல்லியில் சென்று முகாமிட்டு காய் நகர்த்தலில், நாகர்கோவிலில் மக்களவை காங்கிரஸ் உறுப்பினராக 7முறை இருந்த டென்னிஸ்யின் மகன் டாக்டர் தம்பி விஜயகுமார்., குமரி மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர். பினுலால் சிங், வழக்கறிஞர்.ராபட்பூரூஸ், தமிழ் நாடு காங்கிரஸ் செயலாளர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினருமான ரமேஷ் குமார், முன்னாள் மேற்கு மாவட்ட தலைவராகவும் இருந்தவர்,தற்போது தமிழ் நாடு காங்கிரஸ் செயலாளரும், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினரும் ஆன மீனவ சமுகத்தவருமான தாரகைகத்பத், இவரோடு கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி சோனிவிஜிலா இப்போது களத்தில் கடும் போட்டி நிலவும் நிலையில், விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை உறுதி செய்யும் உரிமம் பெற்றவராக, விளவங்கோடு சட்டமன்றத்தில் மீனவ சமூக வாக்குகள் இல்லை என்றாலும் ,கிறிஸ்தவர்களின் நாடார்,பிள்ளை சமூகம் நாயர் மற்றும் இந்து சமுகத்தில் பல்வேறு பிரிவு மக்களும் வசிக்கும் தொகுதி. தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஆர்.ராஜேஸ்குமார் முடிவு எடுக்கும் இடத்தில் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *