• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அனைத்து வகை மாற்றுத்திறன் மகளிர் வாழ்வுரிமை அமைப்பு நடத்தும் பொங்கல் விழா

Byஜெ.துரை

Jan 9, 2023

சென்னை ஆழ்வார்பேட்டை சீனிவாச காந்தி நிலையத்தில் மாற்றுத்திறன் மகளிர் வாழ்வுரிமை அமைப்பினர் நடத்தும் 10ஆம் ஆண்டு பொங்கல் விழாவானது சிறப்பாக நடைபெற்றது.
இது குறித்து நமது செய்தியாளர் சந்திப்பில் அதன் தலைவர் லலித்தாம்பிகை கூறியதாவது: எங்கள் அமைப்பில் அனத்து வகையான மாற்று திறனாளி பெண்கள் இதில் உறுப்பினராக உள்ளனர். இவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து நடத்துவதே இந்த சமத்துவ பொங்கல். அது மட்டும் இன்றி அவர்களது தனி திறமையை வெளிக்கொண்டு வருவதற்காக பல்வேறு போட்டிகளில் கோலப்போட்டி, நடனப்போட்டி, போன்றவை நடத்துகின்றோம் அதுமட்டுமின்றி எந்த ஒரு பெண் மாற்று திறனாளிகள் ஆக இருந்ததாலும் அவர்கள் எங்களை அனுகினால் அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொழில்பயிர்ச்சி மற்றும் அதற்கு தேவையான உபகரணங்கள் கொடுக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்.


மாற்றுத்திறனாளிகள் என்பதால் எங்களை எங்கேயுமே முன்னிலைப்படுத்துவது கிடையாது ஆனால் நாங்கள் எங்களை முன்னிலைப்படுத்துவதற்காகவே இந்த விழா மாற்றுத்திறனாளிகளுக்காகவே மாற்றுத்திறனாளிகள் பண்ணும் விழா தான் இந்த சமத்துவ பொங்கல் என்றும் அது மட்டுமின்றி இந்த கொடிய நோயான கொரோனா இதுபோன்று எந்த ஒரு விஷ தன்மை இல்லாமல் அனைவரும் இந்த சமத்துவ பொங்கல் கொண்டாட எங்களது மாற்றுத்திறனாளிகளின் விருப்பம் என்றும் கூறினார். இந் நிகழ்வின் போது அனைத்துவகை மாற்றுத்திறன் மகளிர் வாழ்வுரிமை அமைப்பு துணை தலைவர் ரேமா ரவி, செயலாளர் மகேஸ்வரி, பொருளாளர் அருணா தேவி உடன் இருந்தனர்.