• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நாகர்கோவில் மாநகராட்சியில் முதல்முறையாக பொங்கல் விழா

நாகர்கோவில் மாநகராட்சி வரலாற்றில் முதல்முறையாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக முழுவதும் பள்ளிகள்,கல்லூரிகள், நீதிமன்றங்கள், ஆட்சியர் அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.நாகர்கோவில் மாநகராட்சி வரலாற்றில் முதல்முறையாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள்,அலுவலக பணியாளர்கள் உள்பட 2000க்கும் மேற்பட்ட பணியாளர் களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை மேயர் மகேஷ் ஒவ்வொரு வரையும் நேரடியாக அழைத்து அனைவருக்கும் வழங்கி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.இந்த செயல்,அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.