மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட அருணாச்சலம்பட்டியில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த திருப்பதி வெங்கடாஜலபதி – வாழவந்தம்மன் திருக்கோவில்.,

இந்த கோவிலில் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை பொங்கல் உற்சவ விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம், ஒரே நாள் திருவிழாவாக நடைபெறும் இந்த பொங்கல் உற்சவ விழாவிற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், கேரளா, ஆந்திரா பகுதியில் வசிக்கும் இந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட மக்கள் 21 நாட்கள் கடும் விரதம் இருந்து, கோவில் திருவிழாவின் போது பக்தியுடன் கோவிலுக்கு வரும் போதே, அரிவாள்களில் ஏறி ஆடியவாறும், கோவில் முன்பு அமைக்கப்படும் தீக்குழியில் இறங்கியும் கோவிலுக்கு வந்தடைவது வழக்கம்.,
அவ்வாறு இந்த ஆண்டும் இன்று காலை துவங்கிய இத்திருவிழாவில் காலை ஒரு முறை அரிவாள்கள் மீது ஏறி ஆடியவாறு உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளில் வளம் வந்த பக்தர்கள் பிற்பகல் 3 மணியளவில் மீண்டும் உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளின் வழியாக வளம் வந்து கோவிலுக்கு முன்பாக அரிவாளில் ஏறி ஆடியவாறு கோவிலுக்கு வந்தனர்.,

தொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் ஆண்கள் மற்றும் பெண் பக்தர்கள், குழந்தைகளுடன் என நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி கோவிலுக்குள் வந்தடைந்தனர்.,
கோவிலில் வெங்கடாஜலபதி – வாழவந்தம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட நிலையில் பக்தர்களும் சாமி தரிசனம் செய்தனர்.,




