திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. பள்ளி தாளாளர் அருட்தந்தை சேசு ஆரோக்கியம் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாக அதிகாரி அருட் தந்தை ஜான் பிரிட்டோ, முதல்வர் அருட் தந்தை ரூபன் ஆகியோர் முன்னிலை விகித்தனர். திண்டுக்கல் விவசாயத்துறை உதவி இயக்குனர் சின்னச்சாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:

பள்ளி குழந்தைகளுக்கும் பொங்கல் விழாவிற்கும் சம்பந்தம் இருக்கிறது. விவசாயத்துக்கு விதை எப்படி ஆரோக்கியமாகவும் சத்தானதாகவும் இருக்க வேண்டுமோ. அதுபோல பள்ளி மாணவர்களும் ஆரோக்கியமாகவும், திறம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். திறமைக்கு என்றுமே முக்கியத்துவம் உண்டு. நாம் இயற்கை உணவுகளை உண்ண வேண்டும். ரசாயண உரங்கள் மூலம் வரும் உணவுகளை உண்ணுவதால் புற்றுநோய் உட்பட பல நோய்கள் இன்று நம்மை ஆக்கிரமித்துள்ளது. முன்பெல்லாம் யாரோ ஒருவருக்குத் தான் கிராமங்களில் நோய் இருக்கும்.

இன்று அனைவரையும் ஆக்கிரமிக்கும் அளவுக்கு நோய்கள் அதிகரித்துள்ளன. இதை கட்டுப்படுத்த ஒரே வழி இயற்கை விவசாயம் தான். நாம் பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள், அனைவரிடமும் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு செய்ய வேண்டும். நாளைய சமுதாயத்துக்கு இன்றைய மாணவர்களே விதைகள். நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் நல்ல சமுதாயத்தை படைக்க முடியும். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் என்றார். துணை முதல்வர் ஞானசீலா நன்றி கூறினார். பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.




