சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செல்வப் பெருந்தகை தெரிவித்ததாவது: தீராத துன்பத்திலும் துயரத்திலும் தமிழக மக்கள் இருக்கிறார்கள் அதிலிருந்து நாங்களும் இன்னும் மீளவில்லை. ஒவ்வொரு அரசியல் கட்சியும் இந்த மரண ஓலத்தின் மூலம் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

நம்மை பார்ப்பதற்காகவும் நம் பேச்சு கேட்பதற்காகவும் மக்கள் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கான பாதுகாப்பை நாம் தான் உறுதிப்படுத்த வேண்டும்.
காவல்துறை இதில் என்ன பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும். காவல்துறை கூட்டத்திற்குள் செல்லாது, போக்குவரத்தை சரி செய்யும், கூட்டத்தில் நடைபெறும் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்தும் இதை தான் காவல்துறை கூட்டங்களின் பொழுது செய்யும்.
எல்லோரும் உண்மையை பேச வேண்டும் நேரம் 12 மணிக்கு கொடுத்திருந்தார் விஜய், 12 மணிக்கு கூட்டம் என்றால் ஒரு மணி அல்லது இரண்டு மணிக்கு கூட தாமதமாக ஆரம்பிக்கலாம். 7:40 மணிக்கு உள்ளே வந்தால் என்ன அர்த்தம். எட்டு மணி நேரத்திற்கு அங்கு இருப்பவர்களுக்கு தண்ணியே கிடையாது. அவர்களுக்கு சாப்பாடு கிடைக்கவில்லை. எட்டு மணி நேரம் மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால் அவருடைய நிலை எப்படி இருந்திருக்கும் என கேள்வி எழுப்பினார்.

39 பேரும் இறந்த பிறகு சடலமாக தான் கொண்டு வந்திருக்கிறார்கள். 40 பேர்களில் ஒருவர் மட்டுமே சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்திருக்கிறார்.
கள்ளக்குறிச்சி விவகாரத்திலும் இதிலும் ஒன்றுதான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் பிணங்கள் மீது அரசியல் செய்யக்கூடாது. இதை அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்பவர்கள் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்
ஏழை எளிய மக்கள் அவர்களுக்கு விழிப்புணர்வே கிடையாது.சிலர் சிறுவர்களாக இருக்கிறார்கள் அவர்களுக்கு வாக்குரிமைகள் கூட கிடையாது. 12 மணிக்கு நிகழ்ச்சி என்றால் சரியான நேரத்திற்கு ஆரம்பித்திருக்க வேண்டும்.