• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வெட்டு குத்து சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்காத காவல் நிலையம்..,

Byஜெ.துரை

Jan 11, 2026

சென்னை பூவிருந்தவல்லி ஜேம்ஸ் தெருவை சேர்ந்தவர் 23 வயதுடைய தமிழச்செல்வன் என்ற வாலிபர்.

இவர் கூலி வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 5/1/2026 நேரம் சுமார் மதியம் 3 மணி அளவில் இவரது நண்பரான பிரபாகரன் என்ற நபருடன் மது அருந்தி உள்ளார்.

அப்பொழுது பிரபாகரன் தமிழ் செல்வன் அவரது சட்டை பையில் இருந்த பணத்தையும் மற்றும் கைபேசியையும் அபகரிக்க முற்பட்டுள்ளர்.

இதை தமிழ்செல்வன் தட்டி விட்டு இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து பிரபாகரன் அவர்கள் அவரது தந்தையான பாஸ்கர் என்ற நபரிடம் சொல்லியுள்ளார்.

ஆத்திரம் அடைந்த பாஸ்கரன் அவர் ஒரு புது பிளேடால் தமிழச்செல்வன் கையிலும், முகத்திலும் கழுத்திலும் 12 தையல் போடும் அளவிற்கு சரமாரியாக வெட்டியுள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் தமிழ்செல்வன் முதல் உதவி பெற்று வரும் நிலையில் பூவிருந்தவல்லி காவலர்கள் இந்த நிமிடம் வரை CSR பதிவு செய்யாமல் FIR பதிவு செய்யாமலும் பேசி தீர்த்துக்கொள்ளலாம் எனவும் அப்படி இல்லை என்றால் உன்மீதே வழக்கு போடுவேன் எனவும் தமிழச்செல்வனை மிரட்டி வருகின்றனர்.

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கொண்டிருக்கும் வேளையில் காவல் உயர் அதிகாரிகள் தலையிட்டு புகாருக்கு நடவடிக்கை எடுக்காத காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படியும் வெட்டு காயம் அடைந்த தமிழ்ச்செல்வன் உறவினர்கள் ஆவடி காவல் ஆணையருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.