அரியலூர் வாலாஜா நகரம் அன்னலட்சுமி ராஜபாண்டியன் திருமணம் மஹாலில் ,அரியலூர் மாவட்ட காவல்துறை ஓய்வூதியர்கள் சேவை சங்கத்தின் நான்காம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சி. ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் இரா சுப்பிரமணியன் வரவேற்றார்.கூட்டத் தீர்மானங்களை சங்க செயலாளர் துரை. இராமதாசு வாசித்தார்.2025 26 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையை சங்கத்தின் பொருளாளர் இரா குணசேகரன் வாசித்தார்.தொடர்ந்து கூட்டத்தில் சிவம் மருத்துவமனை மேலாண்மை இயக்குனர் மருத்துவர் வ. சிவகுமார்,ஃபுட் எக்ஸ்பிரஸ் கம்பெனி தலைமை நிர்வாக அலுவலர் எம் பி மனோகரன்,அரியலூர் மாவட்ட வணிகர் சங்க தலைவர் இராஜ. விஜயகுமார்,வழக்கறிஞர் எஸ் கண்ணன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று சிறப்பு உரையாற்றினார்.

தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தில், 2025 – 26 ஆண்டிற்கான புதிய மாவட்ட தலைவராக அண்ணாமலை, மாவட்டத் துணைத் தலைவராக இரா சுப்பிரமணியன்,மாவட்டச் செயலாளராக ஆர்.ராஜா,மாவட்ட துணை செயலாளராக ஏ. ரெங்கநாதன்:மாவட்ட பொருளாளராக இரா குணசேகரன், புதிய நிர்வாக குழு உறுப்பினர்களாக ராஜா,அசோகன்,செல்லமுத்து,அன்பழகன், பி.வளையாபதி, ஏ ரெங்கநாதன்,உள்ளிட்டோர் அனைத்து உறுப்பினர்களின் சம்மதத்துடன் ஏகமனதாய் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கு, சங்க உறுப்பினர்கள் சால்வைகள் அணிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.தொடர்ந்து கூட்டத்தில் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் சேர்ப்பது, மற்றும் மாத சந்தா வசூல் செய்வது சம்பந்தமாக கலந்த ஆலோசிக்கப்பட்டது.கூட்ட முடிவில் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் ஏ. ரெங்கநாதன் நன்றி கூறினார்.