தீபாவளி பண்டிகை வரும் நிலையில் கோவை ரயில் நிலையத்தில் போலீசார் பயணிகள் உடமைகளை தீவிரமாக பரிசோதித்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை வரும் 20 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பட்டாசு உட்பட எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை பொது போக்குவரத்து சாதனங்களில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தொழில் நகரான கோவையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வரும் நிலையில் இங்கு இருந்து வெளியூர்களுக்கும், வெளி மாவட்டங்களில் இருந்து கோவைக்கும் பட்டாசுகள் கொண்டு செல்வத தடுக்க மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் இடையே கோவை ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் பட்டாசு உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்கிறார்களா ? என்பதை அறிய பயணிகளின் உடைமைகளை போலீசார் பரிசோதனைக்கு உட்படுத்துகின்றனர்.
தடையை மீறி ரயில் மூலம் பட்டாசுகள் கொண்டு சென்றால் அவை பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.