கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஆர். ஸ்டாலின் உத்தரவின்படி நடைபெற்ற தீவிர வாகன சோதனையில், சென்னையில் திருட்டுப் போன இருசக்கர. வாகனம் நாகர்கோவிலில் மீட்கப்பட்டது.

செட்டிகுளம் சந்திப்பில் நடைபெற்ற வாகன சோதனையின் போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வாகனம் ஓட்டிய நபரை. பிடித்து வாகன சோதனை செய்ததில் சோதனை செய்ததில் , அந்த வாகனம் சென்னையில் திருட்டு வழக்கில் பதிவு செய்யப்பட்டதாக தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

திருட்டு வாகனத்தை திறம்பட மீட்ட நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.










