• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான்: உயிருடன் மீட்பு

By

Sep 15, 2021

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நடுப்பட்டி கிராமத்தில் வசிப்பவர் வெங்கடாசலம். இவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் புள்ளிமான் ஒன்று தவறி விழுந்து உயிருக்குப் போராடியுள்ளதை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் .

இதனையடுத்து,சம்பவ இடத்திற்க்கு வந்த தீயணைப்பு மற்றும் வனத்துறை அதிகாரிகள் கிணற்றில் இறங்கி 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி புள்ளி மான் உயிருடன் மீட்டனர்.

மேலும், இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் 2 ஆண்டுகள் ஆன புள்ளிமான் மலைகளில் இருந்து குடிநீர் தேடி வந்து தவறி விழுந்து இருக்கலாம் என்றும் லேசான காயங்கள் இருப்பதால் கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழிக்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்படும் என தெரிவித்தனர்.