• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கவிப்பேரரசு வைரமுத்து வைத்த தலைப்பு “வேட்டைக்காரி”

Byஜெ.துரை

Apr 25, 2024

படத்தின் இயக்குனர் காளிமுத்து காத்தமுத்து, பாடல்களுக்காக கவிஞர் வைரமுத்துவிடம் கதையை சொன்னதும், கதை மிகவும் பிடித்துப் போக, ‘படத்திற்கு வேட்டைக்காரி என தலைப்பு வைங்க, படம் மக்களிடையே சிறப்பாக சென்று சேரும்’ என்று கூறி, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்தினார்.

ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் எழிலாய் அமைந்துள்ள ஏலக்காய் தோட்டப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி வந்துள்ளனர்.

வெளியில் இருந்து பார்க்கும் போது அழகாய் தெரியும் வனப்பகுதிகளில் வாழும் மக்களின் அவதிகளையும், அங்கே ஒரு காதல் ஜோடிக்கு நடக்கும் பிரச்சினைகளையும் தெளிவாக இயக்குனர் காளிமுத்து காத்தமுத்து படமாக்கி உள்ளார்.

ராகுல் கதாநாயகனாக நடிக்கிறார். சஞ்சனா சிங் கதாநாயகியாக நடிக்கிறார். வின்சென்ட் அசோகன், கஞ்சா கருப்பு மற்றும் பிரபல கலைஞர்கள் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி, காளிமுத்து காத்தமுத்து இயக்கி உள்ளார். ஏ.கே.ராம்ஜி இசையமைத்து உள்ளார். ஒளிப்பதிவு கே.ஆறுமுகம். நடனம் பவர் சிவா. ஸ்ரீ கருப்பர் பிலிம்ஸ் சார்பில் விஷ்ணுப்பிரியா வேலுச்சாமி தயாரித்துள்ளார்!

கவிப்பேரரசு வைரமுத்துவின் வைர வரிகளில் இசை வெளியீட்டை தொடர்ந்து, விரைவில் திரைக்கு வருகிறாள் வேட்டைக்காரி.