• Fri. Oct 31st, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிவு..

சாத்தூர் வெம்பக்கோட்டை அருகே பிளஸ் 1 படித்து வந்த (16) வயது சிறுமியை தேனி உத்தமபாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (20) காதலித்து வந்தார். இருவர் வீட்டிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 2024 மே 14 ல் சிறுமியின் விருப்பத்தோடு காட்டு பிள்ளையார் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஆலங்குளம் ரோட்டில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருவரும் தனியாக குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் காப்பகம் 1098 உதவி எண்ணிற்கு வந்த புகாரை தொடர்ந்து, அங்கு சென்ற வெம்பகோட்டை ஊர் நலஅலுவலர் மகாலட்சுமி விசாரித்த போது, 16 வயதை ஆன சிறுமியை திருமணம் செய்து உறவு கொண்ட வாலிபர் மீது போலீசில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து சாத்தூர் மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.