நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் வலிவலம் ஊராட்சி பகுதியில் இன்று நெகிழி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்கும் குப்பை , மக்காத குப்பை என தரம் பிரித்து வீடுகளிலேயே வழங்குவதற்கு குப்பை கூடைகள் வழங்குவதற்கான நிகழ்ச்சி முன்மொழிவாக வலிவலம் ஊராட்சியில் நடைபெற்றது, இதனை நமது மதிப்பிற்குரிய திட்ட இயக்குனர் மற்றும் செயற்பொறியாளர் இன்று துவங்கி வைத்தார்கள். மேலும் பொது மக்களுக்கு குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல் குறித்து அறிவுரைகளை வழங்கினார். இதில் உதவி திட்ட அலுவலர், கீழ்வேளூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி பணி மேற்பார்வையாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், ஊராட்சி செயலாளர், பொறியாளர்கள், மாவட்ட திட்ட மேலாண்மை அலகு, அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
