• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

1 முதல் 9ஆம் வகுப்பு தேர்வுகளை ஏப்.13க்குள் நடத்த திட்டம்

Byவிஷா

Mar 19, 2024

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதித் தேர்வுகளை ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஏப்., 19ல் ஒரே கட்டமாக, 40 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இந்த ஓட்டுப்பதிவு பணிக்கு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஓட்டுச்சாவடிகளாக செயல்பட உள்ளன. அதற்காக, ஓட்டுச்சாவடியாக செயல்படும் அனைத்து பள்ளிகளையும், வரும், 15ம் தேதி முதல் தேர்தல் ஆணையம் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க உள்ளது.

இதன் காரணமாக, ஒன்றாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான, ஆண்டு இறுதி தேர்வுகளை, வரும், 13ம் தேதிக்குள் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசித்து, வகுப்பு மற்றும் பாடவாரியாக தேர்வு கால அட்டவணையை இறுதி செய்ய உள்ளனர். அதன் விபரம், விரைவில் பள்ளிக்கல்வியால் வெளியிடப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.