• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

குமரியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பார்வையிட்ட இடங்கள்

இன்று காலை திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரி வருகை புரிந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளிட்ட பல இடங்களை பார்வையிட்டார்.
திருவனந்தபுரத்திலிருந்து விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை ஹெலிகாப்டர் தளத்துக்கு வந்த குடியரசுத் தலைவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்,குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்,ஜோதி நிர்மலா.இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து அவர் கார் மூலம் அருகிலுள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக படகு தளத்துக்குச் சென்றார். தொடர்ந்து தனிப்படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்ற குடியரசுத் தலைவர், விவேகானந்தர் நினைவு மண்டபத்தைப் பார்வையிட்டார். விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள தியான மண்டபத்தில் சில நிமிடங்கள் தியானம் செய்தார். விவேகானந்தர் சிலை அமர்ந்துள்ள பகுதி உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.

பின்னர், அங்குள்ள சிறப்பு விருந்தினர் கருத்து பதிவு ஏட்டில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அவரது கருத்தை பதிவு செய்தார். விவேகானந்தர் நினைவு மண்டபம் பாறையில் நின்ற வண்ணம் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்ட பின்பு
படகு மூலம் கரை திரும்பியவர் அங்கிருந்து காரில் விவேகானந்த கேந்திரா சென்று பாரத மாதா கோயிலை திரவுபதி முர்மு பார்வை இட்டார் அங்கு விவேகானந்தர் கேந்திர நிர்வாகிகளுடன் GVசில நிமிடங்கள் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் அரசு விருந்தினர் மாளிகைக்கு திரும்பிய குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் திருவனந்தபுரம் சென்றார் அங்கிருந்து லட்சத்தீவக்கு செல்கிறார்.
குமரிக்கு குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரி கடற்கரை பகுதியிலிருந்து, விவேகானந்தர் கேந்திர பகுதி வரை உள்ள அனைத்து கடைகள். மதியம் 1_மணி வரை திறக்கக் கூடாது என காவல்துறை உத்தரவு காரணமாக அனைத்து கடைகளும் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தது.