விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பதினெட்டாவது வார்டுக்கு உட்பட்ட வடக்கு மலையடிப்பட்டி பகுதியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலையில் ஓடுவதால் தண்ணீர் தேங்கியுள்ளதால் வசந்த நகர். குறிஞ்சி நகர்.மருதுபாண்டியன் நகர்.காமராஜர்புரம்.எம்ஜிஆர் நகர் 2.எம்ஜிஆர் நகர் 1.இப்பகுதியில் 1500 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியை கடந்து நான்கு தினங்களாக தாமிரபரணி கூட்டுக் குடிநீர் உடைந்து செல்வதால் இப்பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் வேலைக்கும் செல்ல கூடியவர்களும் சிரமப்பட்டு செய்கின்றனர். அதேபோல் பள்ளிக்குச் செல்லக்கூடிய பள்ளி குழந்தைகளும் பாதையை கடத்து செல்லும் போது சிரமம் பட்டு செல்ல கூடிய சூழ்நிலை உள்ளது.
அவசர நிலையில் மருத்துவமனைக்கு செல்வதற்கும் இந்த பாதை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாதை மோசமான நிலையில் இருப்பதால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுகிறது. பொதுமக்கள் அப்பகுதி சேர்ந்த கவுன்சிலரிடம் குறைகளை கூறினாலும் கவுன்சிலர் நகராட்சி நிர்வாகம் மற்றும் தாமிரபரணி நிர்வாகத்திடம் முறையான புகார் மனு அளித்தும் உடனே சரி செய்ய வேண்டுமென கோரிக்கை முன் வைத்தும்,
கடந்த 10 நாட்களாக சரி செய்யாமல் அலட்சியப்போக்குடன் நகராட்சி நிர்வாகம் செயல் பட்டு வருகிறது. உடனடியாக சரி செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.