இந்தியாவில் நேற்று இரண்டாவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது.
தமிழகத்தில் ரூ100.46 ஆக உள்ள பெட்ரோல் விலை, மும்பையில் ரூ.110 ஆகவும், டீசல் ரூ100ஆகவும் உள்ளது. மேலும் சமையல் எரிவாயுக்கு 15 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாசின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாசின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.100 ஆகவும், சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.900 ஆகவும் உள்ளது. இது மிகவும் கொடூரமானது.
எனவே, பெட்ரோலிய பொருட்கள் மீதான மத்திய கலால் வரிகளை மத்திய அரசு உடனே குறைக்க வேண்டும். அது மக்களுக்கு கொஞ்சம் ஆறுதல் அளிப்பதாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.