கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்நாள் கூட்டம் இன்று நடைபெற்றது ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியுள்ளதாவது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சின்ன பனையூரில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் உள்ளது.

இது தனியாருக்கு சொந்தமான கோயில் ஆகும்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வைகை குண்டாறு இணைப்புக்காக இந்த திருக்கோவிலுக்கு சொந்தமான இடம் மற்றும் 90 தென்னை மரங்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டது.
கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான இழப்பீடு தொகை மற்றும் 90 தென்னை மரங்களுக்கான இழப்பீடு தொகையை கோயிலுக்கு சொந்தமான நிர்வாகத்திற்கு வழங்காமல் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு வழங்குவதாக கேள்விப்பட்டோம்.
எனவே தனியாருக்கு சொந்தமான கோயில் நிலத்தை வைகை குண்டாறு இணைப்புக்காக கையகப்படுத்தப்பட்ட காரணத்தினால் அதற்கான இழப்பீடு தொகையை அந்த கோயில் நிர்வாகத்திற்கு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.