நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்அதில் பிள்ளையார் காட்டூருக்கு மண் சாலையை தார் சாலையாக மாற்றி தரக்கோரி பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் வேலைக்குச் செல்பவர்கள் கர்ப்பிணி பெண்கள் மண் சாலை குண்டுங்குழியும் ஆக உள்ளதால் டூவீலர் செல்லும் போது தடுமாறி கீழே விழும் சூழ்நிலை ஏற்படுகிறது. சரியான நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாததால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் மழைக்காலங்களில் மண் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் நோய் தொற்று ஏற்படுகிறது இது குறித்து பள்ளிபாளையம் BDO அவரிடத்திலும் மனு கொடுத்தும் எந்தவிதமான பதிலும் நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தொடர்ந்து பத்தாண்டு காலமாக எங்க ஊருக்கு பிள்ளையார் காட்டூருக்கு தார் சாலை அமைத்து தர வேண்டும் என கிராம சபை கூட்டத்திலும் மனு கொடுத்தும் ஆனால் இந்த முறை தார் சாலை அமைத்து தரப்படும் என்று கூறினார்கள் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை அரசு அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுகிறார்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்