நாய்களை காப்பகத்தில் பராமரிக்க வேண்டி மக்கள் நீதி மய்யம் கோவை மண்டல அமைப்பாளர் தாஜுதீன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அண்மையில் தெருநாய்களை பிடிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் அதற்கு ஆதரவு கருத்துக்களும் எதிர்மறை கருத்துக்களும் பகிரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நாய்களை காப்பகத்தில் பராமரிக்க வேண்டும் மக்கள் நீதி மய்யம் சார்பில் தெரு நாய்களை காப்பகத்தில் பராமரிக்க வேண்டுகோள் விடுத்துள்ள அவர்கள் வெறிநாய்க்கடி மற்றும் ரேபிஸ் நோய் தடுக்க கருத்தடை செய்வது, தடுப்பூசி போடுவது மற்றும் பிடித்த நாய்களை காப்பகம் அமைத்து பராமரிக்கவும் வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.