• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விநாயகர் சதூர்த்தியை அரசு விழாவாக அறிவிக்க கோரி மனு..,

ByKalamegam Viswanathan

Jul 17, 2025

மத ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் ஆதினத்தோடு இணைந்து தென்னிந்திய இஸ்லாமிய மக்கள் எழுச்சி கழக தலைவர் சுல்தான் என்பவரும் மனு அளித்த சுவாரஸ்யம்

சிபிஐ அமைப்பை பாஜக ஆர் எஸ் எஸ் அமைப்பின் கைக்கூலிகள் என பேசிய த.வெ.க. தலைவர் விஜய் பேசியது கண்டிக்கிறோம் திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீ ஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் பேட்டி.

விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 27 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் தமிழ்நாடு அரசு, மகாராஷ்டிரா மாநிலத்தை முன்மாதிரியாக கொண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என கூறி அகண்ட இந்து ராஷ்டிரா தலைவர் திருவண்ணாமலை ஆதினம் ஸ்ரீ ஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது மத ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் கருணாநிதி சுவாமிகள் ஆதினத்தோடு இணைந்து தென்னிந்திய இஸ்லாமிய மக்கள் எழுச்சி கழக தலைவர் சுல்தான் என்பவரும் வருகைதந்து கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய கருணாநிதி சுவாமிகள் :-

மகாராஷ்டிரா மாநிலத்தை போல தமிழகத்திலும் திமுக அரசு இந்து மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு விநாயகர் சதுர்த்தியை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.

மேலும் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது சிபிஐ விசாரணை அமைப்பை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுடைய கைக்கூலி போல செயல்படுவதாக பேசியது கண்டிக்கத்தக்கது அரசியல் மேடையில் விசாரணை அமைப்பு குறித்து அவதூறாக பேசுவது ஏற்கத்தக்கது அல்ல; இது தொடர்பாக விரைவில் விஜய் மீது புகார் அளிக்க உள்ளோம் என தெரிவித்தார் மேலும் தலைமையிடம் பேசி விஜய்க்கு எதிராக போராட்டம் குறித்தும் முடிவெடுக்க உள்ளோம் என்றார்.

இது குறித்து பேசிய சுல்தான் ஜி : மத ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் விநாயகர் சதுர்த்தியை அரசு விழாவாக அறிவிக்க வேண்டுமென மனு அளிப்பதற்காக சுவாமிகளுடன் சேர்ந்து தானும் வந்துள்ளதாகவும் விநாயகர் சதுர்த்தியை வைத்து மத ரீதியாக பேசியவரும் அமைப்புகள் மத்தியில் மத ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் மனு அளிக்க வந்திருப்பதாக தெரிவித்தார்.