பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் மாவட்ட செயலாளர் தங்கபாண்டி முன்னிலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணை உரிமையாளர்கள் வளர்ப்பு கூலி 20 ரூபாய் உயர்த்தி கொடுக்க வேண்டும் புகார் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர் மாவட்ட கறிக்கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கறிக்கோழி வளர்ப்பு கூலியை ரூபாய் 20 உயர்த்திக் கொடுக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அம்மனுவில் கூறப்பட்டிருப்பதாவது பெரம்பலூர் மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் இயங்கி வருகிறது, கடந்த ஆறு வருடங்களாக மூலப்பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து வரும் நிலையில் எங்களுக்கு வளர்ப்பு கூலியை உயர்த்தவில்லை எனவும், கடந்த 6 வருடங்களாக கறிக்கோழி நிறுவனங்களை தொடர்பு கொண்டும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்று தெரிவித்தனர்.

மேலும் நிறுவனம் மற்றும் உற்பத்தியாளர்களை அரசு அழைத்து முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி வளர்ப்பு விலை உயர்த்த வேண்டும் எனவும், அவ்வாறு உயர்த்தவில்லை என்றால் தொடர்ந்து உற்பத்தி நிறுத்தம் செய்யப்படும். எனவே எங்களது மனுவை பரிசளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.




