• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் சிபிஐ (எம்.எல்) சார்பாக மனு கொடுக்கும் போராட்டம்…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சிபிஐ(எம்.எல்) சார்பாக ஆண்டிபட்டி வட்டாட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது .

ஆண்டிபட்டி வட்டம் தேக்கம்பட்டி கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலம் 200 ஏக்கர் உள்ளது அதேபோல் பஞ்சமி மற்றும் பூமிதான இயக்கம் 100 ஏக்கர் உள்ளது அந்த இடத்தில் சொந்த வீடு இல்லாத ஏழைகளுக்கு 5% வீட்டுமனை வழங்க கோரியும்ஆண்டிபட்டி கூட்டுறவு பண்டகசாலை என் கீழ் உள்ள ரேஷன் கடைகளில் கைரேகை பதியவில்லை எனச்சொல்லி மாதம் முழுவதும் எடுத்து கடத்தும் நிலையை மாற்ற கைரேகை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆண்டிபட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதை தடுத்து நிறுத்தக் கோரியும்ஆண்டிபட்டி பேரூராட்சியில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வலியுறுத்துவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு ஒன்றிய அமைப்பு செயலாளர் கோபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்து கோஷங்கள் அளித்தனர் மாவட்ட அமைப்பு செயலாளர் இளையராஜா கண்டன உரையாற்றினார் இதனை அடுத்து கோரிக்கைகள் அடங்கிய மனுவினை தாலுகா அலுவலக மண்டல துணை வட்டாட்சியர் மணமகனிடம் வழங்கினார்கள் இந்த மனு கொடுக்கும் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.