வருகின்ற 27 ஆம் தேதி இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் சுமார் 80க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிலையில் உத்தமபாளையம் தேரடி பகுதியில் விநாயகர் சிலையை வைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு இந்து முன்னணியின் சார்பாக இந்து முன்னணியின் மாவட்ட பொறுப்பாளர் ராம் செல்வா தலைமையில் உத்தமபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேசனிடம் தனது நிர்வாகிகள் உடன் சென்று மனு அளித்தார்.

இதுகுறித்து ராம் செல்வா கூறுகையில் நாங்கள் தேரடி பகுதியில் 28 சாதியினர் ஒன்றாக இணைந்து ஒற்றுமையுடன் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதற்கு கடந்த 12 ஆண்டுகளாக அரசிடம் அனுமதி கேட்டு வருகின்றோம். இந்த ஆண்டாவது எங்களுக்கு அனுமதி கிடைக்க வேண்டும் என்பதற்காக உத்தமபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பணியிடம் மனு அளித்துள்ளோம். அவர்கள் உறுதியாக எங்களுக்கு அனுமதி வழங்குவார் என தெரிவித்துள்ளார் என்று கூறினார்.