• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

கடலில் கப்பல் மோதியதில் சிதைந்த போன இயந்திர படகிற்கு, கப்பல் நிறுவனத்திடம் உரிய நிவாரணம் கேட்டு மனு…

நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பல்வேறு நிலையிலான இஸ்லாமிய மக்களின் மனுவின் அடிப்படையில் நிவாரணம் வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற, தமிழக அரசின் சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளி நாடு வாழ் தமிழர்களின் நலத்துறை அமைச்சர் செஞ்சி மாஸ்தானிடம்.

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஸ்குமார், மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜ், குளச்சல் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ்,குமரி ஆட்சியர் ஸ்ரீதர், குழித்துறை மறைமாவட்ட அருட்பணியாளர் முன்னிலையில் கொடுத்த மனுவில் வைத்துள்ள கோரிக்கை பற்றி தி தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இடம் தெரிவித்தது.

குமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட,தூத்தூர் மண்டலம்,தூத்தூர் மினவகிராமத்தை சேர்ந்த மீனவர் பைஜூ,த/பெ. அல்போன்ஸ் என்பவருக்கு சொந்தமான புனித அன்டணீஸ்(IND/TN/15MM/9119) என்ற விசைப்படகில் 12 மீனவர்கள் கடந்த (ஆகஸ்ட்_7)ம் தேதி,தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ் கடல் தங்கல் மீன்பிடி தொழிலுக்காக சென்றவர்கள்

கடந்த (செப்டம்பர்_9)ம் தேதி இந்திய பெருங்கடல் ( GPS POSITION 04″32″M,075o57″E) என்ற கடல் பரப்பில் மட்டு தூண்டில் (Long Line) மூலம் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர் அதிகாலை சுமார் 3.40am மணியளவில் அப்போது அந்த வழியாக கப்பல் வருவதை கண்டு படகிலிருந்து ஒலி எழுப்பியும், லைட் அடித்தும் கப்பலின் கவனத்தை விசைப் படகில் இருந்த மீனவர்கள் ஈர்த்துள்ளார்கள்.

அந்த நேரத்தில் நாங்கள் விசைப்படகை இடது பக்கமாகவும், கப்பல் வலது பக்கமாகவும் திருப்பப்பட்டது. எதிர் பாராத விதமாக கப்பல் வலது பக்கமாக திரும்பிய போதும், அந்த கப்பலினால் இழுத்து வரப்பட் மிதவை படகு(two barge) மீனவர்களின் விசை படகின் மீது மோதியதில் மீன்பிடி விசைப்படகு கடலில் மூழ்கியது.

கவிழ்ந்த விசைப்படகில் இருந்து கடலில் குதித்து நீந்தி கப்பலால் இழுத்து வரப்பட் மிதவை படகினில் ஏறியுள்ளனர்(செப்டம்பர்_12)ம் தேதி அதிகாலை 4.00am அளவில் மாலத்தீவு கடற்படையினரால் குமரி 12 மீனவர்களும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பின் இந்திய தூதரக அதிகாரிகளின் உதவியுடன் கடந்த (செப்டம்பர்_15)ம் தேதி சொந்த ஊர் வந்துவிட்டனர் மீனவர்கள் 12 பேரும், கப்பல் மோதிய வேகத்தில் விசைப்படகில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான மீன்கள் கடலில் சிதறிபோனது. உடைந்த விசைப்படகின் மதிப்பு 1.5 கோடி மதிப்பிலான படகை முழுமையாக இழந்துள்ளார் பைஜூ. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரண உதவியுடன்,விசைப்படகின் மதிப்பு என்ற நிலையில்.இழுவை கப்பல் மீது வழக்கு பதிந்து கப்பலின் செந்தமான நிறுவனத்திடமிருந்து உரிய நிவாரணம் பெற்று தர மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை மாண்புமிகு அமைச்சர் செஞ்சி மாஸ்தானிடம் மனு கொடுத்தேன்.அந்த மனுவுடன் 12 மீனவர்களின் முகவரியுடன் கூடிய பட்டியலையும் கொடுத்துள்ளேன் என கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர், வழக்கறிஞர் செ. ராஜேஷ் குமார் தெரிவித்தார்.