• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஸ்மார்ட் மீட்டருக்கு எதிராக மனு…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மைலாடியில் உள்ள மின்சார அலுவலகத்தில் பொறியாளரிடம், ஸ்மார்ட் மீட்டருக்கு எதிராக 238_ மனுக்களை ஒன்றியக் குழு உறுப்பினர் கே.அய்யப்பன் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அகமது உசேன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.அந்தோணி மற்றும் கட்சியின் பல்வேறு பொருப்பாளர்களும் இணைந்து வழங்கியதோடு. ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது மூலம் பயன்படுத்துவோர் கூடுதல் கட்டணம் செலுத்தும் நிலையை தடுக்க வேண்டும் என கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

எதிர் வரும் 2025_டிசம்பர் 31_க்குள் இந்தியா முழுவதும் அனைத்து மின் நுகர்வோரும், ஸ்மார்ட் மீட்டர் எனப்படும் மின் மீட்டர்களை பொருத்த வேண்டுமென ஒன்றிய அரசு நிற்பதற்கும் படுத்தி வருவதை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மைலாடி மின்சார அலுவலகத்தில் முன் கண்டன கூட்டம் நடத்தியதோடு,கண்டன கோசமும் எழுப்பினார்கள்.

கேரள அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளது போல், தமிழக அரசும் ஒன்றிய அரசின் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழகத்தில் செயல் படுத்தக் கூடாது என கோரிக்கையும் வைத்தார்கள்.